Sunday, June 8, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசு செரிய பேருந்து சேவைக்காக கட்டணம் வசூல்

சிசு செரிய பேருந்து சேவைக்காக கட்டணம் வசூல்

சிசு செரிய பேருந்து சேவைக்கான முழு செலவையும் அரசாங்கத்தால் தாங்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் வகையில் இன்று (30) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக மேலதிக கட்டணம் அறவிட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி, சிசு செரிய பேருந்து சேவையை வழங்குவதற்கான உரிய கட்டணத்தில் 70% அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 30% பெற்றோரிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

பணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் இருந்தால், அதாவது ஏழை மானியம் பெறும் குடும்பங்களின் குழந்தைகள் இருந்தால், கட்டணம் ஏதுமின்றி சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

30% கூட மீளப்பெற முடியாவிட்டால் சேவை முற்றாக நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles