நெல் அறுவடையில் பரவி வரும் கொடவெல்ல புழு நோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் வேளாண்மை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நோய் தற்போது ஆனமடுவ – திம்புலாகல பிரதேசங்களில் பரவி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த புழுவின் 3 வகையான கம்பளிப்பூச்சிகள் நெற்பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இது சேனா புழுவால் ஏற்படும் சேதத்திற்கு நிகரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.