Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்மீண்டும் துருக்கியின் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்

மீண்டும் துருக்கியின் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்

துருக்கியில் இருபது ஆண்டுகள் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகித்த தாயீப் எர்டோகன் மேலும் ஐந்தாண்டுகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நேற்று (29) இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் 52.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதுடன், இதுவரையான வாக்கு எண்ணிக்கையில் அவர் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கியில் 2003 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014 ஆம் ஆண்டு அந்தபதவியை கலைத்து விட்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

அன்றுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகின்றது.

இதன் முதல்கட்டமாக கடந்த 15 ஆம் திகதி அங்கு தேர்தல் நடந்தது.

இதில் எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளும்இ கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

இரு தரப்பினரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில்இ நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார்இ அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles