எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை புத்தர் கல்வி அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய மதங்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு, வெளிநாட்டிலிருக்கும் போதகர் ஜெரோம் பெர்ணான்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.