இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பொருளாதாரம் முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்வதால் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.