Saturday, September 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதல்தியவத்தை கடற்பரப்பில் மூழ்கி இருவர் பலி

தல்தியவத்தை கடற்பரப்பில் மூழ்கி இருவர் பலி

நேற்று தல்தியவத்தை கடற்பகுதியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் கண்டவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும், ரிக்கில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போன ஏனைய நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles