பொருளாதார நிலமை சீரடைந்து வருகின்ற நிலையில் இறக்குமதி தடை படிப்படியாக தளர்த்தப்படும் என அரசாங்கம் ஏலவே அறிவித்திருந்தது.
இதன்படி ஜூன் மாதம் முதலாம் வாரத்தில் 100 வகையான இறக்குமதி பொருட்களுக்கான தடை நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உள்நாட்டு சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை பாதிக்காத அல்லது மேம்படுத்தும் வகையிலான பொருட்கள் மீதான இருக்கும் தடையே நீக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிய வருகிறது.