ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பிள்ளைகளின் தாயின் இளைய சகோதரனை (மாமா) கல்பிட்டி பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகள் 10 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.