Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி - நடத்துனர் வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி – நடத்துனர் வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 26,561 ஆகும்.

சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என சபையின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles