Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடிவேல் சுரேஸுக்கு எதிராக SJB ஒழுக்காற்று நடவடிக்கை

வடிவேல் சுரேஸுக்கு எதிராக SJB ஒழுக்காற்று நடவடிக்கை

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான நேற்றைய வாக்கெடுப்பின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், வடிவேல் சுரேஷ் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இது கட்சியின் தீர்மானங்களுக்கு எதிரானது என தெரிவித்து, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles