Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரூபாவின் பெறுமதியை அதிகரிக்க மத்திய வங்கி தலையீடு

ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க மத்திய வங்கி தலையீடு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட்டு சில நடவடிக்கைகளை எடுத்ததாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சியம்பலாபிட்டிய, ரூபாவின் பெறுமதியானது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய வங்கி கடந்த வாரங்களில் சந்தையில் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாணய விகிதங்களில் படிப்படியாக ஏற்ற இறக்கத்தை அனுமதிக்க கணக்கிடப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ரூபாவின் பெறுமதியானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் எனவே சில தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles