Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது

தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது

தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று(25) முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் இன்று(25) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொரளை மயானத்திற்கு பொரளை பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles