வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்று பொரளை பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் உடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
மரணத்திற்கான காரணத்தை சரிபார்க்க ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என கடந்த விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவிடம் நிபுணர் குழு தெரிவித்திருந்தது.
விசேட நிபுணர் குழுவின் கோரிக்கைக்கு அமைய வர்த்தகரின் உடலத்தை தோண்டி எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.