கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அடுத்த சில மாதங்களில் ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என கம்பஹா மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 22% ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப் பகுதியில் 36,911 டெங்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.