சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் இன்று (25) காலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் 09வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.