Sunday, January 18, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ ஐஸுடன் பெண் உட்பட மூவர் கைது

ஒரு கிலோ ஐஸுடன் பெண் உட்பட மூவர் கைது

இரத்தினபுரி – மாரப்பனை பிரதேசத்தில் ஒரு கிலோ 19 கிராம் ஐஸுடன் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 25,600 ரூபா பணம் மற்றும் சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரதான சந்தேகநபரான திலும் எனப்படுபவர் சீதுவ கொடுகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், கடந்த 19ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரால் போதைப்பொருள் ஒருதொகையை கைப்பற்றிய போது அங்கிருந்த இராணுவ வீரரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles