இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கல் பொய்யானது என கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கொத்து என்று கூறி இரத்தினக்கல் வியாபாரி ஒருவரால் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு வழங்கப்பட்ட பாறையை அதிகாரசபையின் அதிகாரிகள் கையாண்ட விதம் தொழில்முறை கண்ணியத்திற்கு ஏற்புடையதல்ல என கோப் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
இவ்வாறான பாறைகள் அதிகளவில் காணப்படுவதால், அதனை கையாளும் போது தொழில்சார் மட்ட அதிகாரிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தலைவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயல்களால் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை அதிகாரிகளின் தொழில் கௌரவமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கோப் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.