Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கைக்கு நன்கொடையாக மேலும் 10,000 ரூபாவை வழங்கினார் தமிழக யாசகர்

இலங்கைக்கு நன்கொடையாக மேலும் 10,000 ரூபாவை வழங்கினார் தமிழக யாசகர்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நன்கொடை அளித்த தமிழக யாசகர் பூல்பாண்டியன், தமது கடைசி நன்கொடையை தமிழக முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது என்ற நடைமுறையை 75 வயதான பூல்பாண்டியன் வழக்கமாக கொண்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் பூல்பாணடியன் 50 லட்சம் ரூபாயை தமிழக அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், தமக்கு வயதாகிவிட்டதால் யாசகம் செய்வதை விடுத்து, கோயில்களுக்கு செல்வதன் மூலம், வாழ்க்கையை செலவிட திட்டமிட்டுள்ளதாக பூல்பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரை ஆட்சியர், பூல்பாண்டியனுக்கு சுதந்திர தினத்தின் போது ‘சமூக சேவகர் விருது’ வழங்கிக் கௌரவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles