இலங்கையிலுள்ள 61 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்கள் டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது 15 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காணப்படுவதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் டொக்டர் லஹிரு கொடிதுவுக்கு தெரிவித்தார்.
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,560 ஆக உள்ளதுடன், அவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.