Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹஜ் யாத்திரைக்காக மக்கா செல்லவுள்ள 3,750 இலங்கையர்கள்

ஹஜ் யாத்திரைக்காக மக்கா செல்லவுள்ள 3,750 இலங்கையர்கள்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு விஜயம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்த இலங்கைக்கான ஹஜ் கோட்டா எதுவாக இருந்தாலும், கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

எவ்வாறெனினும் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், இலங்கையர்கள் இந்த ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி யாத்திரை மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் முதல் குழு எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

புனித நகரமான மக்காவில் ஹஜ் செய்வது இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles