மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
“2023ஆம் ஆண்டு இந்த விலை அதிகரிப்புடன் இலங்கையில் மது பாவனை குறைந்துள்ளது. இந்த வருடத்தின் இந்த சில மாதங்களில் 30 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது.
இந்தக் குறைப்பு நல்லதுதான். மதுவை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இந்த குறைப்பு சட்டவிரோத மதுபானங்களின் பாவனையை அதிகரிக்குமாயின் அதன் வருவாய் அரசாங்கத்திற்கு கிடைக்காது.
இந்த நாட்டில் நோயாளிகளை உருவாக்கும் கட்டுப்பாடற்ற பானம் உள்ளது. எனவே நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆனால் விலையை குறைக்க முடியாது. மதுபானங்களின் விலையை குறைக்க அரசு தயாராக உள்ளது என்பதை கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பார்த்தேன்.
ஆனால், இல்லை, நம்மால் குறைக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.