Wednesday, November 20, 2024
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பிக்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை!

எம்.பிக்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் கூட நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதியை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிப்பதாகவும் அதேசமயம் பாடசாலை மாணவர்களின் பருவச்சீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாகவும், இது மிகவும் தவறான விடயம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles