ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நேற்று (23) சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி, அந்நாட்டின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் மற்றும் நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் பலரை சந்தித்துப் பேச்சு நடத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜனாதிபதி இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஜப்பானில் தங்கியிருப்பார்.
ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் Fumio Kishida, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi, நிதியமைச்சர் Shunichi Suzuki மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் Taro Kono ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28வது சர்வதேச மாநாட்டிலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.