மாலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இலங்கையைச் சேர்ந்த நான்கு அமைதி காக்கும் படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று (22) தெரிவித்துள்ளது.
வாகன தொடரணிக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையின் போதே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மாலியின் கிடால் பகுதியில் டெஸ்ஸாலிட்டில் உள்ள ஐ.நா. முகாமுக்கு வடமேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான இலங்கை வீரர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர், சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடத்தியதில் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.