பதில் நிதி அமைச்சராக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படிஇ இந்த விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதி அமைச்சராக செயற்படுவார்.