தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ் உட்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸார், அவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் செல்வராசா கஜேந்திரன் உட்பட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.