மீனவர்களுக்கான இலவச மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (23) காலை 08.00 மணிக்கு பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சீன அரசாங்கம் இந்நாட்டு மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கியுள்ள நிலையில், மண்ணெண்ணெய் பயன்படுத்தும் 26,000 படகுகளுக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.
இவ்வாறு மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கை சீன தூதுவர் வெய் ஷென் ஹொன் ஆகியோரின் தலைமையில் நடைபெற உள்ளது.