இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய, பிரதான சந்தேகநபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த விபச்சார விடுதியுடன் தொடர்புடைய 7 பேர் பாணந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குருவாதொட்ட ரெமுன பிரதேசத்தில் பெண்களை விற்பனை செய்ய முற்பட்டபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும், அவர்களை வேறொரு வாடகை வண்டியில் ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு பெண்ணை சுமார் 55ஆயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாக பொலிசார் குறிப்பிட்டுள்ளர்.
இவ்வாறு ஒப்பந்தம் செய்த பெண்களை அழைத்து செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு இரண்டு கார்களில் நான்கு பெண்களும் சென்றிருந்த வேணை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் 33 வயதுடைய மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி அமைப்பாளராக பணியாற்றியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நடமாடும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேக இந்த நடமாடும் விபச்சார வர்த்தகத்தை பல காலமாக நடத்தி வருவதாகவும், இதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.