Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

நாளை முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சகல வகுப்புகளும் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்,விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், கையேடுகள், இலத்திரனில் அல்லது அச்சி ஊடகங்கள் மூலம் மாதிரி பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles