தான் நிச்சயமாக இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறியுள்ள போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது கருத்து பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு ஏதேனும் வகையில் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, நேற்று மிரிஹானவில் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனையில் காணொளி மூலம் கலந்துகொண்டார்.
தன்போதே தாம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தனது மன்னிப்பு உண்மையைப் பிரசங்கித்ததற்காக அல்ல என்றும் தமது கருத்து ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் ம்டும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறினார்.
‘நான் நற்செய்தி உண்மையைப் பிரசங்கித்தேன், நான் பைபிளில் உள்ளதைப் பிரசங்கித்தேன். அது இன்னும் பைபிளில் உள்ளது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் பௌத்த , இந்து , இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எந்த வகையிலும் வார்த்தைகள் உங்களை மனரீதியாக காயப்படுத்திவிட்டன. இலங்கையில் உள்ள பௌத்த மதகுருமார்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.