Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம்: சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

எரிபொருள் விநியோகம்: சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles