அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளின் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்க செலவீனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சலுகைகளில் பாரிய குறைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரச் சுமையை அனைவரும் குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கருத்து.
இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை அமல்படுத்துவதைக் கண்காணித்து மீளாய்வு செய்யும் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.