Tuesday, April 8, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L மற்றும் A/L பரீட்சைகள் ஒரே வருடத்தில் நடத்தப்படும் - கல்வி அமைச்சர்

O/L மற்றும் A/L பரீட்சைகள் ஒரே வருடத்தில் நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடாத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்றைய தினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை தீர்க்கும் வகையில் கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7 ஆயிரத்து 800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் மொழி போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற்று 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles