Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு193 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது

193 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டுவந்த படகு ஒன்றை, புத்தளம் சின்ன அறிச்சாறு பகுதியில் வைத்து, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக கடலட்டைகள் கொண்டுவரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு சின்ன அறிச்சாறு கடற்கரைப் பகுதியில், கற்பிட்டி கடற்படையினர் படகொன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, 193 கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் உள்ளிட்ட பல பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles