Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழ்நாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை

தமிழ்நாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை

இந்தியாவின் தமிழ்நாட்டில் வசித்து வந்த இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 22 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிரான மேற்கண்ட உத்தரவினை ராமநாதபுரம், மகிளா நீதிமன்றம் நேற்று (18) பிறப்பித்தது.

வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட ஆண்டனி மார்க்ஸ் (52) என்ற நபர், 2022 ஜனவரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

#The Hindu

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles