உமா ஓயா, நீர்மின் உற்பத்தி நிலையத்தின், முதலாம் பிரிவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில், உமா ஓயா, நீர்மின் உற்பத்தி நிலையத்தின், இரண்டாம் பிரிவின் மின் உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என, சம்பந்தப்பட்ட நிறுவனப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மின்னுற்பத்தி நிலையம் ஊடாக, தேசிய மின் கட்டமைப்புக்கு, 120 மெகாவொட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.