Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ வீரர்கள் 3712 பேருக்கு பதவியுயர்வு

இராணுவ வீரர்கள் 3712 பேருக்கு பதவியுயர்வு

14 ஆவது தேசிய போர் வீரர் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும் (வழக்கமான மற்றும் தன்னார்வப் படை), 3,348 இதர நிலை அதிகாரிகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வானது 2023 மே 19 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles