Thursday, April 3, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8,010 கிலோ ஹூக்கா புகையிலை சுங்கத்திடம் சிக்கியது

8,010 கிலோ ஹூக்கா புகையிலை சுங்கத்திடம் சிக்கியது

டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷிஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஹூக்கா புகையிலை ஒரு தொகை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

8,000 கிலோ எடை கொண்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி 16.4 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருகொடவத்த, கொள்கலன் முனையத்தில் இன்று (18) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக நிறுவனம் ஒன்றின் பொய்யான பெயரைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருளை இறக்குமதி செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (சமூக பாதுகாப்பு பிரிவு) யூ.கே.அசோக ரஞ்சித் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles