Thursday, April 3, 2025
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருகோணமலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை

திருகோணமலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை

திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகில், நடத்த திட்டமிப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை தலைமையக காவல்துறை தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அமைதி மற்றும் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்வதற்கு எதிராக, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles