செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியது பிரேசில்

இலங்கைக்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியது பிரேசில்

பிரேசிலிய கூட்டுறவு முகவரகம் (ABC) மூலம் பிரேசில் அரசாங்கம், ஒருதொகை மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இதில் 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 8 மில்லியன் பொலிப்ரொப்பிலீன் டிப்ஸ் (சேலைன் ஊசிகள்) என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று(17) இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனஸிடம் இருந்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது, இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை எடுத்துரைத்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், பிரேசில் அரசாங்கத்தின் இந்த நல்லெண்ணச் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles