Sunday, September 14, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச நிறுவனங்களின் மாதாந்த செலவுகள்: அறிக்கை கோர தீர்மானம்

அரச நிறுவனங்களின் மாதாந்த செலவுகள்: அறிக்கை கோர தீர்மானம்

சகல அரச நிறுவனங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கையை கோருவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 06 மாத காலப்பகுதிக்கு மாதாந்தம் செலவிடப்பட்ட அலகுகளின் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி பாவனை தொடர்பான தரவுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles