13 வயது சிறுமியை பல நாட்களாக துஷ்பிரயோகம் செய்த நபர், பொலிஸாரிடம் சிக்கி கொள்வோம் என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாவலப்பிட்டி – தொம்பகஸ் தலாவ பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றில் குறித்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட நபர் அவரது மாமா என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு 13 வயதுடைய மகள் ஒருவர் இருப்பதாகவும் அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் சந்தேக நபரின் மனைவியின் சகோதரி எனவும் அவர் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிவதால் குறித்த சிறுமியும் சந்தேக நபரின் மகளும் அவரது தாய் மற்றும் தந்தையின் பாதுகாப்பில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பள்ளியின் வகுப்பு ஆசிரியையிடம் சிறுமி கூறியதையடுத்து, அந்த ஆசிரியை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சந்தேக நபரை தேடி நேற்று (16) பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்ற போது, அவர் தப்பிச்சென்றதாகவும், இன்று (17) காலை மயானம் ஒன்றில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.