Wednesday, November 20, 2024
24.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொரளை தனியார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

பொரளை தனியார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மருத்துவமனை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை தாம் எதிர்ப்பதாக சட்டமா அதிபர் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தனியார் வைத்தியசாலை சமர்ப்பித்த ரிட் மனு இன்று மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அப்ரூ விகம் இந்த ஆட்சேபனையை எழுப்பினார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் மருத்துவமனை சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றில் முன்னிலையாகி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துவதற்கான இடைக்கால நிவாரண கோரிக்கை தொடர்பான உண்மைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகம் டி அப்ரூ அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இவ்வாறு இடைக்கால நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர் ஆட்சேபனைகளை முன்வைக்காமல் இவ்வாறு இடைக்கால நிவாரணம் கோர முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles