Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபடோவிட்ட நளினின் உதவியாளர்கள் மூவர் கைது

படோவிட்ட நளினின் உதவியாளர்கள் மூவர் கைது

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘படோவிட்ட நளின்’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திச் செல்லும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள், 05 கிலோ 320 கிராம் கேரள கஞ்சா, 16 கிலோ 450 கிராம் அபின் மற்றும் புகையிலை கலந்த மாவா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்தாக கருதப்படும் 162,000 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மூவரும் தெஹிவளை, கல்கிசை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலை நடத்திவரும் படோவிட்ட நளினின் பிரதான சீடர்கள் மூவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles