Sunday, February 1, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் - சைக்கிள் விபத்து: 15 வயது சிறுவன் பலி

கார் – சைக்கிள் விபத்து: 15 வயது சிறுவன் பலி

கெக்கிராவ – எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹஇலுப்பள்ளம பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாணவன் பயணித்த சைக்களில் மோதிய கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர், மாணவன் சேனாபுர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles