இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கைக்கான தலைமை நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உலக வங்கியின் நிர்வாக சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் அதற்கு ஆதரவளிப்பதில் உலக வங்கியின் பங்கு குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியதாக நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்தார்.
தற்போது கொழும்பில் இருக்கும் பரமேஸ்வரன் ஐயர் பல சிரேஷ்ட அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.