Saturday, November 8, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

பத்தேகம, நியாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜின் கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு நாளை (17) பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதிக்குள் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது.

குறித்த பிரதேசங்களில் உள்ள கிளை வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமானது என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles