Sunday, March 29, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனை கொலை செய்த தந்தை கைது

மகனை கொலை செய்த தந்தை கைது

காலி கொஸ்கொட – இந்துருவ பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை மற்றும் மகனுக்கிடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் தந்தை கத்தியால் மகனின் கழுத்தில் குத்தியமையை தொடர்ந்து மகன் மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார்.

பலத்த காயத்துடன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட மகனை பலபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற வழியில் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

65 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles