Thursday, August 7, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கைக்கு 2,000 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முயற்சி

இலங்கைக்கு 2,000 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முயற்சி

இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு எல்லைக்கு அனுப்பத் தயாராக இருந்த 2,090 கிலோ கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரை புதுக்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடப்பதாக கீரைத்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதற்கமைய, புதுக்குளத்தில் தென்னந்தோப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லொறிகளை பொலிஸார் சோதனை செய்தனர்.

குறித்த லொறியில் பயணித்தவர்கள் சர்க்கரையை ஏற்றிச் செல்வதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சர்க்கரை மூட்டைகளை அகற்றி பார்த்தபோது, ​​சர்க்கரை மூட்டைகள் போன்று தயாரிக்கப்பட்ட நிலையில், 2000 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles