மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அது தொடர்பில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
பதவிகளுக்கான நியமனங்கள் எதுவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அனைத்துக்கும் தயாராகவே இருக்கின்றோம், நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.